வடக்கு முதல்வர் வடக்கின் அமைச்சர்கள் சகிதம் மன்னாரில் மக்கள் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான ஈச்சளவக்கை, சன்னார் பிரதேச மக்கள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் தங்கள் பகுதிகளுக்கு நேரில் வந்து தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் அறிந்து அதற்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதையடுத்தே முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர் குழுவினர் இப்பகுதிகளுக்குச் சென்று மக்கள் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வன் அடைக்கலநாதன், வினோ நோகாதரலிங்கம் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஈச்சளவக்கை, சன்னாhர் கிராமங்களில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சர்களும் அதன் பின்னர் மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இச்சந்திப்பின்போது மன்னாரில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் தமிழர் தரப்பின் பங்களிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

1

2

6

8

10

11

12

13

14

தொடர்புடைய செய்தி

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம்!