வடக்கு முதல்வர் மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு விஜயம்

மண்சரிவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

444(6)

55(8)

இந்த மண்சரிவால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருக்கின்றோம்.

அவர்கள் விரும்பினால், கொழும்பில் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற விக்னேஸ்வரன் தலைமையிலான குழு, பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பூணாகலை கணேஸ வித்தியாலயத்துக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் நிவாரணம் பொருட்களும் வழங்கி வைத்தார்.