வடக்கு முதல்வரை கைதுசெய்ய வேண்டுமாம்!: கம்மன்பில கூறும் காரணங்கள்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து, பிணையில் வௌிவரமுடியாத படி, விளக்கமறியலில் வைக்கும் வரை தான் காத்திருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ´எழுக தமிழ்´ நிகழ்வுக்கு முதல்வர் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்திற்கு அரச சொத்துக்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர், வரலாற்றில் முதல் தடவையாக அரச சொத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் பிரிவனைவாதிகள் இவ்வாறானதொரு பேரணியை ஏற்பாடு செய்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கம்மன்பில மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor