வடக்கு மாகாணத்தில் 20- 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும்.

அவ்வாறு அறிவிக்கப்படும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

மேலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து, தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையிலும் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2ஆம் ஆம் திகதி, காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன” என வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor