வடக்கு மக்கள் பிரபாகரனைத் தேடுகின்றனர்!

வடக்கில் மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக வடக்குமாகாண மக்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீண்டும் தேடுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது, வடக்கில் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வடக்கு மாகாண மக்கள் தன்னிடம் தலைவர் பிரபாகரன் இருக்கவேண்டுமெனத் தெரிவித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் இருக்கும்போது, சாதி, பேதம் எதுவும் இருக்கவில்லையெனவும், தமிழ் மக்கள் மீண்டும் அவ்வாறானதொரு சூழலையே எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தற்போது அதிகரித்துவரும் சாதி, பேதம் தொடர்பாக எவரும் பேசுவதில்லையெனவும், கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்குக்கூட சாதி, பேதம் பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்குக் கூட சாதி பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதைவிட ஆசனத்தில் அமர்வதற்குக்கூட சாதி பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor