வடக்கு மக்களுக்கு நோர்வே உதவ வேண்டும் – அரச அதிபர்

வடமாகாணத்திற்கு யதார்த்தமான நல்லதொரு தீர்வு கிடைப்பது உறுதி என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்சந்திப்பின் போது தெரிவித்தார்.

DSCF4458

நேற்று காலை 10 மணியளவில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறெற் லொதனுக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர்சுந்தரம் அருமைநாயகத்திற்குமிடையிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது வடக்கு மக்களுக்கு பல்வேறு அடிப்படை தேவைகள் இருப்பதாகவும் அவற்றில் உடனடியாக வீடுகள் அல்லது தற்காலிக குடியிருப்புக்கள் தேவைப்படுவதாக அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த நோர்வே தூதுவர் தம்மிடம் ஓரளவாக நிதி உள்ளது ஆயினும் இது தொடர்பில் சரியான தகவல்களை திரட்டி முன்னுரிமை அடிப்படையிலே தங்களாலான உதவிகளைச் செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.