வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்: மனோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

தமிழ் பேசும் பொலிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு கோருவதை தாம் அனுமதிக்கப் போவதில்லையெனவும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்ததன் பின்னரே பொலிஸ் அதிகாரம் பற்றிய பேச்சுக்கு கவனம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts