ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு விருப்பமில்லை என்று அமெரிக்காவிலுள்ள ஒக்லான்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
அதேபோல அவ்விரு மாகாணங்களிலும் சிவில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளை ஆரம்பத்தில் குடியேறிருந்த உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு முறையான பொறிமுறைகள் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த ஆய்வு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் த ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.