வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் கமலேஷ்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

5 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள கமலேஷ் சர்மா இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி மற்றும் தற்போதுள்ள நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.