வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு

chandrasiriதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்திவருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அதன்படி இன்றைய தினம் ஆளுநருக்கான பதவி நீடிப்புக் கடிதம் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.