வடக்கின் மிக உயரமான சிவபெருமான் சிலை

வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் – சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

sivaparuman

இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி நேற்று ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு, அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

யோகர் சுவாமிகளின் சிவ தொண்டர் அமைப்பை சேர்ந்தவர்கள் இவற்றை முன்னின்று மேற்கொண்டு உள்ளார்கள்.

சம்புநாதர் ஆலயத்தை சுற்ற உள்ள ஆலயங்களில் இருந்து சிவனடியார்களால் ஓம் நம சிவாய என்கிற மந்திர பாராயணத்துடன், பூரண கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, சம்புநாதர் ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இலங்கையிலேயே முதன்முதலாக தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு இடம்பெற்று உள்ள கோவில் இதுவே ஆகும்.