வங்கியில் போலி நகை அடகுவைத்தவர் கைது

இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர்.

மேற்படி பெண் குறித்த வங்கியில் ஒன்றரைப் பவுண் எனத் தெரிவித்து போலி நகையை அடைவு வைத்துவிட்டு வெளியேற முற்பட்டுள்ளார்.

எனினும் வங்கி ஊழியர்கள் போலி நகை என அடையாளம் கண்டதையடுத்து குறித்த பெண்ணை தடுத்ததுடன் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த வங்கியின் முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.