லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார்.

29-lingaa-motion-capture-350x262

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சூப்பர் ஸ்டார் ஒரு கோவிலின் பின்னணியில் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அவர் அணிந்துள்ள ஆடை வித்தியாசமாக உள்ளது. லேசாக கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்.

வெள்ளை பனியனுக்குமேல் முழுக்கை சட்டை அணிந்து பட்டனை திறந்து பறக்கவிட்டு வருகிறார். கழுத்தில் ஒரு டர்பனை கட்டி அதன் ஒரு முனையை தோளைச் சுற்றி தொங்கவிட்டிருக்கிறார். காலில் லெதர் ஷூ அணிந்திருக்கிறார்.

புலி நகத்தை டாலராக கழுத்தில் அணிந்திருக்கிறார். முகத்தில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். 80களில் வலம் வந்த ரஜினியை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அவர் நடந்து வரும்போது புழுதி பறப்பதாக டிசைன் செய்திருக்கிறார்கள்.

லிங்கா என்ற எழுத்து மெட்டல் லெட்டராக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்திலும் ரஜினி கழுத்தில் அணிந்திருப்பது போன்ற புலி நக டிசைன் இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களிடமும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.