ரொறன்ரோ பிராந்தியத்தில் தமிழ்பெண்ணைக் காணவில்லை!

ரொறன்ரோப் பிரதேசத்தினை அண்மித்த யோர்க் பிராந்தியத்தில் வசித்து வந்த 44 வயதுடைண தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று அந்தப் பிரதேசப் பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி இவர் தனது வீட்டைவிட்டுச் சென்றுள்ளார்.

maliny-missin-intoronto-

இவர் சென்ற வாகணம் அண்மையிலுள்ள வணிக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் அவர் தான் 15 நாட்களிற்குள் திரும்பி வருவேன் தன்னைத் தேட வேண்டாம் என எழுதி வைத்திருந்த குறிப்பொன்றையும் விட்டுச் சென்றுள்ளார்.

கலாமாலினி சிவகுமார் என்ற பெயரையுடைய இவர் மாலினி என்றும், மாலி சிவா என்றும் அழைக்கப்படுவார். 44 வயதுடைய இவர் 5 அடி 2 அங்குல உயரத்தை உடையவராகவும், நடுத்தரத் தோற்றத்தையுடையவராகவும், நீண்ட கறுத்த தலைமுடியைக்கொண்டவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் கடைசியாக ஒரு ரீ சேட்டும், கறுப்பு நிற கோட்டும், நீல ஜீன்சும் அணிந்திருந்தார். இவர் பற்றிய தகவல்களை தங்களுடன் பகிறுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.

யோர்க் பிராந்திய பொலிசாரினை 1-866-876-5423 FREE இணைப்பு 7241 என்ற இலக்கத்திலோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரை 1-800-222-tips என்ற இலக்கத்திலோ அல்லது www.1800222tips.com என்ற இணையத்திலோ பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.