ரைஸ் வாளி சவாலுக்கு ஐ.நா.விருது

ரைஸ் வாளி சவாலை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

rise-bugget

அண்மையில், ஐஸ் வாளி சவால் பிரபலமடைய தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் ரைஸ் வாளி சவால் என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் ஆரம்பமாகியது.

அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி வழங்கி, அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும். அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் சேர்க்கலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சவாலின் நோக்கம்.

ரைஸ் வாளி சவாலை ஆரம்பித்து வைத்த பெருமை ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி (38) என்பவரை சேரும்.

இவரது சமூக தொண்டை பாராட்டும் வகையில் அவருக்கு கர்மவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐகாங்கோ (iCONGO) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா.வும் விருதினை வழங்குகிறன.

இதேவேளை, 2015 மார்ச் 23 ஆம் திகதி டெல்லியில் நடைபெறும் விழாவில், மஞ்சுலதா கலாநிதிக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விருது சிறிய காரியங்கள் மூலம் உலகில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.