ரி.ஐ.டியினரால் ஒருவர் கைது

யாழ். கொடிகாமம் பகுதியை சேர்ந்த எஸ்.மகிந்தன் (வயது 28) என்பவர் பங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவிருந்த இவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லையென காரணம் கூறப்பட்டே கைது செய்யப்பட்டார்.

இவரது வீட்டிற்கு வந்த ரி.ஐ.டியினர் இவரை கைதுசெய்து வவுனியாவிலுள்ள ரி.ஐ.டியினர் முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.