ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும், ஜனாதிபதி குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக நேரடியாக தலையிட்டு சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும், சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor