தன்னிடம் 5 வாகனங்களே உள்ளதாகவும் ஆனால் அதற்கு மேல் வாகனங்கள் வைத்திருப்பதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 3
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆறு வாகனங்களும் 213 பொலிஸ், இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நீதிமன்ற தீர்ப்பு படி குறைந்த வாகனமும் குறைந்த பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக ராஜித தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நாராஹென்பிட்டியவில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட ஶ்ரீசுக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, நீதிமன்றம் சந்திரிக்காவிற்கு மாத்திரமே தீர்ப்பு வழங்கியதாகக் கூறினார்.
இதேவேளை, இரத்தினபுரியில் இடம்பெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, ஜானக வக்கும்புர, ரஞ்சித் சொயிசா, ரொஷான் ரணசிங்க, ஜானக பண்டார, உதித் லொக்குபண்டார ஆகியோர் அறிவித்துள்ளனர்.