யுத்தம் எமக்கு மனநோயாளிகளையும் கொடுத்துச் சென்றுள்ளது; வடக்கு சுகாதார அமைச்சர்

saththiya-lingamஇலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்திலே தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்தகால யுத்ததில் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் கைது செய்யப்பட்டோ அல்லது காணாமல் போயோ அல்லது கொலை செய்யப்பட்டோ உள்ளனர்.

இவை பெரும்பாலும் உறவுகளின் கண்களுக்கு முன்னாலேயே ஏற்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலானவர்கள் தற்போது உளவளம் பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளனர். இதனாலேயே பெருமளவிலானோர் தற்கொலை செய்து கொள்வதுடன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

எனவே இவர்களுக்கு உளவள சேவை மிக முக்கியமாக வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் உளவள பாதிப்புக்கு உள்ளானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய உளவள சேவையினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் , மாகாண சபை உறுப்பினர்களும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்களுக்கான சேவை மிக விரைவில் வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.