யாழ்.வந்த ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கும் நேரடி விஜயம்

rathika-sidbanesanகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாவீசாவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்ததுடன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்ததுள்ளார்.

அத்துடன் வலி.வடக்கு மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிற்கும் சென்று நேரடியாக நிலமைகளையும் அவதானித்துள்ளார்.

மேலும் நாளை போரினால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் சென்று நிலமைகளை அவதானிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவரின் வருகையை அறிந்த புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்வதாகவும் இதனால் அவர் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.