யாழ் மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

யாழ்ப்பாணததில் உள்ள பிரபல்யமான பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை குறிப்பாக கஞ்சா பாவனையை ஊக்குவிக்கும் முகமாக போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்தாகவும்

police-vimala-sena

இது போன்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சில மாணவர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாணவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம்

என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.