யாழ். மாகநகர சபையால் தீவகத்திற்கு குடிநீர் விநியோகம்

தீவகப்பகுதி மக்களின் குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் யாழ். மாநகர சபை வேலணை, ஊர்காவற்றுறை பகுதிகளுக்கு பவுஸர் மூலம் குடிதண்ணீர் வழங்கி வருகின்றது.

watter-bow

பருவ கால மழை பொய்த்துப் போனதால் யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீருக்கு கூட மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதனடிப்படையில் அவர்களுக்கு தேவையான குடி நீரை வழங்கும் நோக்குடன் யாழ். மாநகர சபை வேலணை , ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலகங்கள் , பிரதேச சபைகள் ஆகியவற்றிற்கு பவுஸர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.

நீர் விநியோகம் தொடர்பில் முதல்வர் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் நீர் விநியோகம் மேற்கொண்டு வரும் நாம் மக்களது நன்மை கருதி தீவகப் பகுதிக்கும் மேலதிக சேவையினை செய்து வருகின்றோம். அவர்களுக்கு போதியளவான நீர் கிடைக்கும் வரை தொடர்ந்தும் நாம் எமது சேவையினை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor