யாழ் மக்களுக்கு இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்!

ளைக்கும்- யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது.

train-notes

20.9.2014 தொடக்கம் 22.09.2014 புகையிரத பரிட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் புகையிரதப் பாதையின் அருகில் செல்லும் போது அவதானத்துடன் செல்லுமாறும். மக்கள் கால்நடைகளின் நடமாட்டத்தை புகையிரதப் பதையருகில் கட்டுப்படுத்தும் படி அறிவுறுத்தப்படுகின்றன.

இவ்வாறு ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன் துண்டுப்பிரசுங்களும் யாழ் நகரில் வழங்கப்படுகிறது. (22 திங்கட்கிழமை பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பரிட்சார்த்த பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது)