யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட ஆளுனர்

யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி நேற்றயதினம் பார்வையிட்டார்.

alunar-tranin

பல தசாப்தகாலமாக தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரதச்சேவை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதல் ஆரம்ப்பிக்கப்படவுள்ளது. 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின் யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத மார்க்கத்திலுள்ள புகையிரதப் பாதைகளும் புகையிரத நிலையங்களும் துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் கிளிநொச்சி முதல் கொழும்பு வரை புகையிரத சேவைகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய பகுதிகளுக்கான புனரமைப்பு பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத மார்க்கத்தில் முக்கிய நிலையமாக விளங்கும் யாழ் புகையிரத நிலையமும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இங்கு விஜயம் செய்த ஆளுநர் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டார். அத்துடன் உரிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.