யாழ் பல்கலை விரிவுரையாளருக்கு ASDF இன் “சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்” விருது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனுக்கு “சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்” (Best Scientific Researcher) எனும் விருது கிடைத்துள்ளது.

nimal

இந்தியாவிலுள்ள விஞ்ஞான அபிவிருத்தி மற்றும் கல்வியாளர் சங்கத்திடமிருந்து [ Association of Scientists, Developers & Faculties (ASDF)] இவ் விருது கிடைக்கப் பெற்றுள்ளார். விருது வழங்கலானது எதிர்வரும் 30ம் திகதி புதுச்சேரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பிரசுரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.