யாழ்.பல்கலைக்கழகத்துக்கு 8 மாடிக்கட்டடம்

யாழ். பல்கலைக்கழகத்துக்கு, 8 மாடிக் கட்டடம் அமைத்துத் தருவதாக, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவினரால், புதன்கிழமை (17) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மாவை. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இக்கட்டடம் அமைக்கபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor