யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய பேரவை (கவுன்சில்) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உயர் கல்வி அமைச்சினால் பதின்நான்கு பேரவை உறுப்பினர்களின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவான், சுமந்திரன் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தனித்தனியே பேரவை உறுப்பினர்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரித்து அனுப்பியிருந்தனர். தமது தெரிவுகளையே முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினர்களாக தெரிவு தெரிவுசெய்யப்பட வேண்டுமென்ற வற்புறுத்தலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்திருந்ததாகத் தெரியவருகின்றது.

ஆனாலும் யாழ் பல்கலைக்கழகத்துக்கான பேரவை உறுப்பினர்களை குலுக்கல் முறையிலேயே தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. அரசியல் தலையீடுகளுக்கோ, தனிப்பட்ட சிபாரிசுகளுக்கோ உறுப்பினர்கள் தெரிவில் முன்னுரிமை வழங்கப்படவில்லையென உயர் கல்வி அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிதாக யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

தேவராஜன் றங்கன்
பொன்னையா தியாகராஜா
மார்க்கண்டு இராமதாஸ்
முருகுப்பிள்ளை ஸ்ரீபதி
இளையதம்பி அன்னலிங்கம்
தர்மலிங்கம் இராஜரத்தினம்
காசிப்பிள்ளை தெய்வேந்திரன்
சுசீலாதேவி சாரங்கபாணி
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
முத்துக்குமாரு பாலசுப்பரமணியம்
ஷெரின் சேவியர்
வண ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
வேதவல்லி செல்வரத்தினம்
கோடீஸ்வரன் ருஷாங்கன்

ஆகியோரே புதிதாக பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களாவர்.