யாழ்.நூலகம், வைத்தியசாலைக்கு ரூ 2.4 மில்லியன் உதவி

மலேசியா, இலங்கை கூட்டு நிறுவனங்களின் சம்மேளனத்தினால் யாழ்.நூலகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மற்றும் 1.4 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கடந்த ஞாயிற்றக்கிழமை வழங்கப்பட்டன.

13372412174_70c701a578

யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிகளினை மலேசிய இலங்கை கூட்டு நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் குலசேகரம் சபாரத்தினத்தினம் வழங்கி வைத்தார்.

யாழ்.பொதுநூலகத்திற்கு 1 மில்லியன் ரூபா காசோலை, புத்தகங்கள் மற்றும் 20 கணினிகள் என்பவற்றை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பெற்று யாழ்.பொது நூலகத்தினருக்கு வழங்கினார்.

மேலும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மருத்துவப் பொருட்களை யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு தலைவர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை பெற்றுக்கொண்டார்.

பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட காசோலை தவிர்ந்த, புத்தகங்கள், கணினிள் மற்றும் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் பெறுமதி 1.4 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts