யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று திங்கட்கிழமை மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த காலத்தில் தமக்கான பரீட்சைகள் சீராக நடை பெறவில்லையெனவும் ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீட்த்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைக்கான பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன் தமது துறைக்கான இணைப்பாளரை நியமிக்கவும் இந்த அடையாள வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏனையை கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் ஈடுபட்டிருந்தனர்.