யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2020

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் நடாத்தும் பொங்கல் திருவிழா 2020 எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய பண்பாடு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய பண்பாட்டு நடைபவனி யாழ் நகரினை வலம்வரும். பண்பாட்டு நடைபவனியானது கல்லூரி முன்றலில் ஆரம்பித்து காங்கேசன் துறை வீதியினூடாக வைத்தியசாலை வீதியினை அடைந்து கஸ்தூரியார் வீதியூடாக மீண்டும் கல்லூரியினை வந்தடையும்.

தமிழர் தலை நிமிர் கழகத்தின் பொங்கல் திருவிழாவில் இணைந்து எமது பாராம்பரியங்களினையும் பண்பாட்டு அம்சங்களினுடனும் இணைந்து தமிழர் திரு நாளினைக் கொண்டாட அனைவரினையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Recommended For You

About the Author: Editor