யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.