யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய 2ம் கட்ட அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசுடனான ஒப்பந்த்த்துற்கு நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலகயத்மினை இந்திய அரசு அபிவிருத்தி செய்து விமான சேவைகள. ஆரம்பிக்கவிருந்த சூழலில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தடைப்பட்டு பின்னர் இலங்கை அரசின் 2.26 பில்லியன் ரூபா நிதியில் முதல்கட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு 2019-10-17 அன்று சென்னைக்கான குறிப்பிட்ட விமான சேவைகள் இடம்பெறும் நிலையில் அதன் இரண்டாவது கட்டம் இந்திய அரசின் நிதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கமைய இந்திய அரசின் நிதியில் மேற்கொள்வதற்கான அனுமதிக்காக நேற்றைய அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சரவை ஏற்றுக்கொள்ளப் பட்டதன் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாந்திடப்பட்டு அடுத்த கட்ட அபிவிருத்துப் பணிகள் இடம்பெறவுள்ளது. இதில் மூவாயிரம் மில்லியன் ரூபாவில் அபிவிருத்திப்பணிகள் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.