யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்பு செலவை 5 ஆண்டுகள் இந்தியா பொறுபேற்கும்

யாழ்ப்பாணம் மத்திய கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்புச் செலவை இந்திய மத்திய அரசு பொறுப்பேற்றுக கொள்ளும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், மத்திய கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளுக்காக இந்திய அரசின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசின் பங்களிப்புடன் விரைவில் திறக்கப்படும்.

திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்க உள்ளது.

இலங்கைக்கு இந்தியா பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது” என்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor