யாழ்ப்பாணத்தில் 62,000 விவசாய குடும்பங்கள்

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 ஆயிரத்து 269 விவசாயக் குடும்பங்கள் இருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ஆம் ஆண்டு மே மாதம் வரையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படியே இந்தளவு விவசாயக் குடும்பங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்டத்தில் 15 கமநல சேவை நிலையங்களும், 256 கமக்கார அமைப்புக்களும் இருக்கின்றன.

இவற்றின் கீழ், 31 ஆயிரத்து 283 ஏக்கர் வயல் நிலங்களிலும், 21 ஆயிரத்து 3 ஹெக்டேயர் மேட்டு நிலங்களிலும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சிறுபோகம் மற்றும் மேட்டு நிலச் செய்கைகளுக்காக, 992 குளங்களும், 23 ஆயிரத்து 737 நீர்ப்பாசனக் கிணறுகளும் இருப்பதாக அந்தப் புள்ளிவிபரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor