யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

2000ஆம் ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நிமலராஜனின் உருவப்படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார் ,அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் மலர்மாலை அணிவித்தார், அதனையடுத்து வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் , ஊடகவியலாளர்கள், மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Recommended For You

About the Author: Editor