யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்கள் படுதோல்வியில்அரசுக்கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள 10 தொகுதிகளாகிய மானிப்பாய் ,வட்டுக்கோட்டை,உடுப்பிட்டி காங்கேசன்துறை,ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்,நல்லூர்,சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகியவற்றில் அவற்றினை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது..யாழ் மாவட்டத்தில் இந்த 10 தொகுதிகளுக்காகவும் 16 ஆசனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 ஆசனங்கைள கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டது.அரசின் இணைப்பு கட்சியான ஈ.பி.டி.பி யின் கோட்டையான ஊர்காவற்துறை தொகுதியினை மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிகொண்டிருப்பது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

அரசுக்கட்சியில் கிடைத்த 2 ஆசனங்களுக்கு அங்கஜன்,கமல்,தவராசா ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கில் போட்டி நிலவுகிறது. அவர்களில் ஒருவர் வெளியேறவேண்டி இருக்கும்.விருப்பு வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்ட பின்னரே ஆசனங்களுக்குரியவர்கள் விபரம் தெரியவரும்.

சாவகச்சேரி தொகுதி

வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி —- 22,922 — 83.61 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 4,193 — 15.29 %
ஐக்கிய தேசியக் கட்சி — 89 — 0.32 %

பருத்தித்துறை தொகுதி

வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் ரசுக் கட்சி —- 17,719 —– 84.22 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,953 — 14.04 %
ஜனநாயக ஒற்றுமை முன்னணி— 162 — 0.77 %

கோப்பாய் தொகுதி

வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் அரௌக் கட்சி — 26,467 —- 84.26 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —- 4,386 —- 13.96 %
ஐக்கிய தேசியக் கட்சி — 127 —- 0.40 %

உடுப்பிட்டி தொகுதி

வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி —– 18,855 —- 87.65 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,424 —- 11.27 %
ஐக்கிய தேசியக் கட்சி —- 57 —- 0.26 %
சுயேச்சைக்குழு 1 —- 54 —- 0.25 %

மானிப்பாய்தொகுதி

வாக்கு விபரம் வருமாறு …
இலங்கை தமிழ் அரசுக் கட்சி — 28,210 — 86.57 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —- 3,898 — 11.96 %
சுயேச்சைக்குழு 6 —- 109 —- 0.33 %
ஐக்கிய தேசியக் கட்சி — 88 —- 0.27 %

வட்டுக்கோட்டைத் தொகுதி
வாக்கு விபரம் வருமாறு..
இலங்கை தமிழ் அரசுக் கட்சி —- 23,442 —— 84.52 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —– 3,763 —- 13.57 %
ஐக்கிய தேசியக் கட்சி —— 173 ——0.62 %

காங்கேசந்துறை.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி — 19,596 — 81.83 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 4,048 — 16.90 %
சுயேச்சைக்குழு 7 —- 62 —- 0.26 %

யாழ் தொகுதியில்

தமிழ் அரசுக் கட்சி— 16,421 — 86.14 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —2,416 —-12.67 %
ஐ.தே.க — 60 — 0.31 %

நல்லூர் தொகுதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சி— 23,733 —88.64 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,651 –9.90 %
ஐக்கிய தேசியக் கட்சி—- 148 —-0.55 %

ஊர்காவற்துறை தொகுதியில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி– 8,917 —67.42 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 4,164 —31.48 %
சோஸலிச சமத்துவக் கட்சி— 29 —0.22 %

Related Posts