யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது.

இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

அதாவது நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை, கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியுள்ளது. இதில் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விபரங்கள், யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor