யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியளலாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவருடன் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த கைது சம்பவத்தில் ஹிரு செய்திச் சேவையின் யாழ்ப்பாணத்துக்கான ஊடகவியலாளரான த.பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.