யாழில் 12 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்

maleriya-mosquto-denkuயாழ். மாவட்டத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 12 பேர் கடந்த வாரத்தில் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி, தெல்லிப்பழை, நல்லூர் ,உடுவில், சங்கானை, வேலணை, யாழ்ப்பாணம் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அனைவருக்கும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.