யாழில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!!

கொக்குவில் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறி யாழில் பெரும்பாலானோர், பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஆகவே இத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பயணத் தடையை மீறி செயற்பட்ட சிலர் கடுமையாக பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor