யாழில் பயணிகள் பஸ்ஸொன்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 11.15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸானது, பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ் -ஆனைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.

பஸ் வந்தவேகத்தில் காரினை மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் என அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தையும், அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது.

இதன்போது ஆடை விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் ஒருவரின் தலையில் கடும் காயங்களுக்குள்ளானர்.

அது மாத்திரமன்றி ஆடைகள் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன சேவிர்ஸ் நிலையத்தின் ஒருபகுதியும் சேதமடைந்ததுடன் அங்கு நின்ற கார் ஒன்று சிறு சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

பஸ் மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனம் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor