யாழில் சாராயக்கடைக்குள் புகுந்த பெண் : மகன் மீது கடும் தாக்குதல்

யாழ் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சாராயக்கடையில் 18 வயது மாணவனான தனது மகன் நண்பர்களுடன் இணைந்து பதுபானம் அருந்திக்கொண்டிருப்பதை அறிந்த அரச ஊழியரான பெண் ஒருவர் சாராயக் கடைக்குள் அதிரடியாகப் புகுந்து மகனை நையப்புடைத்துள்ளார்.

தந்தை இல்லாத குறையை தன் மகனிற்குக் காட்டாது அவன் கல்விக்காகப் கஸ்ரப்பட்டு உழைத்துவரும் நிலையில் கூடா நட்புக்களுடன் சேர்ந்து தனது மகன் குடித்துக் கும்மாளமடிப்பதை அறிற்த அவரின் கோபம் சாராயக் கடைக்குள் அதிரடியாக நுளையும் தைரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்கு மது அருந்திக்கொண்டிருந்த ஏனைய சிலரும் இணைந்து மாணவர்கள் அனைவரையும் பிடித்துக்கொடுக்க அந்தத்தாய் அனைவரையும் முட்டுக்காலில் இருத்தி அவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor