யாழில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை – அரச அதிபர்

dak-suntharam-arumainayagam-GAயாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை மட்டுமே பதிவு செய்கின்றனர் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற அதேவேளை குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவோ அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவோ எத்தகவலும் இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கப்படாமல் விடுவதால் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு ஒரு வாய்பாகக் கூட அமையலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.