யாழில் எல்லாளன் கொலை!

யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நேற்று முன்தினம் நிறுவப்பட்ட எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் “எள்ளாளன்” என்ற தமிழ்க்கொலையுடனேயே பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

ellalan

எல்லாளன், பண்டாரவன்னியன், பரராசசேகரன் ஆகிய மூன்று தமிழ் மன்னர்களது சிலைகள் நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸால் திறந்துவைக்கப்பட்டன.

இதில் எல்லாளனின் சிலைப்பீடத்தில் எல்லாளன் என்பதற்குப் பதிலாக “எள்ளாளன்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் இலங்கையை ஆண்ட பெருமன்னனின் பெயரை இவ்வாறு சிதைத்து எல்லாளனை அவமரியாதை செய்துவிட்டார்களே என்று தமிழ் உணர்வாளர்களும் மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எழுச்சி கொண்டது யாழ்.நகர்! தமிழ் மன்னர்களின் சிலைகள் திறப்பு!