யாழில் அதிகளவானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆ.கேதீஸ்வரன்

no-cancer-sign_bigger2005ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“யாழ். மாவட்டம் விவசாய நடவடிக்கைகள் பெரிதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய நடவடிக்கைகளுக்கு அதிக இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதுவரை காலமும் புற்றுநோய் சிகிச்சை மையம் தெல்லிப்பழையிலும் புற்று நோயாளர் விடுதி யாழ். போதனா வைத்தியசாலையிலும் காணப்பட்டது.

இதனால் நோயாளர்களை அங்குமிங்கும் கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது வட மாகாணத்திலே பெரிய புற்று நோய் வைத்தியசாலை ஆரம்பிக்கப்படுவது பெரும் வரவேற்கத்தக்க விடயமாகும்” என்றார்.

தொடர்புடைய செய்தி

தெல்லிப்பழை வைத்தியசாலை ஜனாதிபதியால் ஞாயிறன்று திறப்பு