யாழிற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor