யானை தாக்கி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் சாவு!

மாங்குளம் நகருக்கு அருகில் மல்லாவி வீதியில் யானை தாக்கி யாழ்ப்பாணத்தைச் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“சம்பவத்தில் கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தன் (வயது- 37) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.

தச்சுத்தொழிலாளியான அவர் மல்லாவி , கொள்ளவிலாங்குளம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்று விட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொடிகாமத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.

அதன் போது மாங்குளம் – மல்லாவி வீதியில் மாங்குளம் சந்திக்கு அருகில் இரவு 10 மணியளவில் வீதியில் நின்ற யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அதனை அடுத்து யானை மோட்டார் சைக்கிளையும் அதனை செலுத்தி வந்தவரையும் தூக்கி வீசி தாக்கியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்” என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor