ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் நடவடிக்கை, பொதுத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சரும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினருமான டீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இன்று இரவு (நேற்று இரவு) நடைபெறும் சந்திப்பில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்” – எனவும் அவர் கூறினார். பரந்துபட்ட கலந்துரையாடலுக்குத் தயார் என ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இருவரையும் சந்திக்க வைக்கும் முயற்சியில் ஏழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல், அரசமைப்புத் திருத்தம், தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படும் – என்றார்.