மேலும் 47 பேருக்கு கோரோனா தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 47 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று திங்கட்கிழமை (19-10-2020) கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

அவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 43 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து 2 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 585 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 403 பேர் முழுமையாகச் சுகமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor