மூன்று வார பயிற்சிக்கு பின், பவுலராக மாறிய சூரி!

தற்போது உள்ள காமெடி நடிகர்களில் அனைத்து இயக்குனர்களின் முதல் சாய்ஸ் சூரி தான்.

sooori

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற படங்களின் மூலம் சந்தானத்தையே பின்னுக்கு தள்ளி விட்டார்.

இவர் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணம் இயக்குனர் சுசீந்திரன் தான், இவர் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தான் சூரியை பலருக்கும் தெரிய வந்தது.

தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ஜீவா படத்தில் நடித்துள்ளார். இப்படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதை என்பதால், இதில் சூரி பவுலராக நடித்துள்ளாராம்.இதற்காக 3 வாரம் ஒரு பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்து, படத்தில் நடித்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் சுசீந்திரன் கூறியுள்ளார்.